மேலும் செய்திகள்
திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துவதில் மெத்தனம்
01-Sep-2024
உடுமலை, : உடுமலை ஒன்றியத்தில், கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கு, சுய உதவிக்குழுவினர் வாயிலாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. திருப்பூர் மாவட்ட அளவில், அதிக எண்ணிக்கையில் ஊராட்சிகள் உள்ள ஒன்றியங்களில் இது உள்ளது. இருப்பினும், அதற்கேற்ப துாய்மைப்பணியாளர்கள் இல்லாததால், திடக்கழிவு மேலாண்மையில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது.வீடுதோறும் கழிவுகளை சேகரித்து, அவற்றை உரமாக்கும் திட்டம் திடக்கழிவு மேலாண்மையில் உள்ளது. ஆனால் இத்திட்டம், 50 சதவீத ஊராட்சிகளில் நடைமுறையில் இல்லை. கழிவுகள் திறந்த வெளியில் வீசுவதும், நீர்நிலைகளின் அருகில் குவித்து விடுவதும் நடக்கிறது.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'உடுமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுய உதவிக்குழுவினர் வாயிலாக, பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கழிவுகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு வீடுகள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்' என்றனர்.
01-Sep-2024