உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னை விவசாயிகளுக்கு இன்று விழிப்புணர்வு கூட்டம்

தென்னை விவசாயிகளுக்கு இன்று விழிப்புணர்வு கூட்டம்

உடுமலை; மடத்துக்குளம் வட்டாரத்தில், தென்னை விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடக்கிறது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது.இந்நிலையில், மடத்துக்குளம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம், தோட்டக்கலைத்துறை சார்பில், இன்று காலை, 11:00 மணிக்கு, பாப்பான்குளம் அரசு விதைப்பண்ணை வளாகத்தில் நடக்கிறது.இதில், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது.பங்கேற்கும் விவசாயிகளுக்கு, தென்னையில் பூச்சி நோய் கட்டுப்பாடு, தென்னங்கன்று நடவு முறைகள், ஊடுபயிர்கள் சாகுபடி, நீர் மற்றும் உர மேலாண்மை முறைகள் குறித்த கையேடு இலவசமாக வழங்கப்படும்.இக்கூட்டத்தில் தென்னை விவசாயிகள் பங்கேற்குமாறும், மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 ; பூவிகா தேவி 80720 09226 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு, பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை