உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி, என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், சைபர் குற்றங்களில் இருந்து தப்பிப்பது தொடர்பான, விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. சைபர் குற்றவியல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ பேசுகையில், ''மொபைல் போன்களுக்கு, அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் 'லிங்கை' தொடக்கூடாது. தேவையற்ற செயலிகளை 'டவுன்லோடு' செய்யக்கூடாது. அரசு அங்கீகரித்துள்ள 'MKAVASH2' செயலியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நிதி மோசடி தொடர்பான குற்றங்களை, 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்,'' என்றார். காவலர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் பாரதி, கோமளவள்ளி, கோமதி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை