உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பக்தர்களுக்கு விழிப்புணர்வு

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பக்தர்களுக்கு விழிப்புணர்வு

உடுமலை : உடுமலை ஆரண்யா அறக்கட்டளை சார்பில், ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சுற்றுலா தலங்கள், வனத்திலுள்ள கோவில்களுக்கு செல்வோர், பிளாஸ்டிக் பயன்படுத்தி விட்டு அவற்றை அங்கேயே வீசிச்செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.உடுமலை அருகே, சின்னாறு வனப்பகுதியில் ஏழுமலையான் கோவிலில், சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. பக்தர்கள் அதிகளவில் வரும் நேரத்தில், பிளாஸ்டிக் கழிவுகளும் வனப்பகுதியில் அதிகரிக்கின்றன.பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், உடுமலை ஆர்.ஜி.எம்., கல்வி நிறுவனங்கள், ஆரண்யா அறக்கட்டளை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் கோட்டம் சார்பில், கோவிலில் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித பைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி