உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வடமாநிலத்தினர் போர்வையில் வங்கதேசத்தினர்: போலீசார் கண்காணிப்பு தொடர்கிறது; இதுவரை 130 பேர் கைது

வடமாநிலத்தினர் போர்வையில் வங்கதேசத்தினர்: போலீசார் கண்காணிப்பு தொடர்கிறது; இதுவரை 130 பேர் கைது

திருப்பூர் : 'டாலர் சிட்டி' என்று பெயர் பெற்ற திருப்பூரில், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி உ.பி., பீஹார், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களும் வேலை வாய்ப்புக்காக தங்கியுள்ளனர். இவர்கள் தவிர வெளிநாட்டை சேர்ந்தவர்களும், தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். தொழில் விஷயமாக, பல நாட்டவரும் திருப்பூருக்கு வந்து செல்கின்றனர்.தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால், அதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டு, கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு 'புகலிடமாக' திருப்பூர் உள்ளது. தொழிலாளர்கள் என்ற போர்வையில் நடமாடி வரும் குற்றவாளிகள், முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை போலீஸ் கைது செய்கின்றனர்.

நான்கு மாதத்தில் 130 பேர் கைது

திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனம், வடமாநிலத்தினர் தங்கியுள்ள பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் விளைவாக, கடந்த ஜன., முதல் தற்போது வரை பல்லடம், மங்கலம், நல்லுார், காலேஜ் ரோடு, வாவிபாளையம் என, பல பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர், 130 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.இவர்களை திருப்பூர் அழைத்து வரும் ஏஜென்டுகள் யார், யார் என்பதை விசாரித்து, அவர்களின் நடமாட்டம் குறித்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக, தொழில்துறையினர், வேலைவாய்ப்பு நிறுவனங்களை அழைத்து பல்வேறு விஷயங்களை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளனர்.

தீவிரமாகும் கண்காணிப்பு

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வடமாநிலத்தினர் போர்வையில் தங்கியுள்ள வங்கதேசத்தினர் போலீசாரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க வேறு இடங்களுக்கு வெளியேறுகின்றனர். அவர்களை கைது செய்யும் வகையில், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற போக்குவரத்து உள்ள இடங்களில் போலீசார் கண்காணிக்கின்றனர்.சந்தேகப்படுபவர்களின் ஆவணங்களை சரி பார்த்த பின்னரே அனுப்புகின்றனர். இதுதவிர, சொந்த காரணங்களை காட்டி ஜாமீன் கேட்கின்றனர். அப்படி மீறி சிறையில் இருந்து வருபவர்கள் தப்பித்து விடாமல் இருக்க அவர்களை முகாம்களுக்கு அனுப்பும் நடவடிக்கையை மாநகர போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:வங்கதேசத்தவர் மீதான கண்காணிப்பு, ஆய்வு போன்றவை தீவிரமாக உள்ளது. இதன் எதிரொலியாக தான், இதுவரை, 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடரும் பட்சத்தில் இன்னும் அதிகளவில் கைதாவார்கள். எனவே, இவர்களின் ஊடுருவலை தடுக்கவும், அவர்களை கண்டுபிடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தங்கள் குடியிருப்பு பகுதியில் சந்தேகப்படுபவர்களின் நடமாட்டம் ஏதாவது இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
மே 01, 2025 16:53

இருக்கற ரயில்கள் போதலியாம். இன்னும் அதிகமாக ரயில்கள வடக்கிலிருந்து இயக்கணும்.


Marai Nayagan
மே 01, 2025 08:00

இந்த மூர்க்க கள்ள குடியேறிகளை பிடிக்க ஒவ்வொரு வெள்ளியும் மதியம் அவர்கள் கூடும் இடத்தில் சோதனை செய்தால் போதும். எளிதில் பிடிச்சு அழிச்சு விடலாம். ஆனால் ஓட்டுக்கு எதுவும் செய்யும் 21 பக்க டாஸ்மாக் மாடல் அரசு எதுவும் செய்யாது. அவர்களை போற்றி பாதுகாப்பு அளிக்கும். இந்த இந்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்


Marai Nayagan
மே 01, 2025 07:54

நான் சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் சென்ற போது ஒரு வெள்ளி கிழமை மதியம் புற்றிஸல் போல ஒரு மூர்க்க கூட்டம் சுற்றி திரிவது கண்டு ஆபத்தை உணர்ந்து கொண்டேன். இவர்களை அழைத்து வருபவர் அடைக்கலம் கொடுப்பது, வேலைக்கு அமர்த்துவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்கும் செயல் என்பதை பனியன் கம்பெனி முதலாளிகள் உணர வேண்டும். இவர்கள் கூட்டம் பெருத்த உடன் பல சட்ட விரோத கலவரங்களை செய்யப் வாய்ப்பு உள்ளது


Marai Nayagan
மே 01, 2025 07:47

சிந்திக்காமல் அந்த ஒரு புத்தக கருத்துக்களை யாரோ ஒரு துதுவர் க்கு அரேபியா மொழியில் ஒரு தேவ துதன கூறியதாக அவரின் பொய் கதைகளை அள்ளி விட்டு பகுத்தறிவு இல்லாத மூர்க்க கோழை கூட்டத்தை உருவாக்கி உலகில் அமைதி இல்லாமல் ஆக்கி விட்டது. திராவிட டாஸ்மாக் கூட்டம் அலுமினிய அண்டா பிரியாணிக்கு அடிமை ஆகி விட்டது. மக்களுக்கு இந்த மூர்க்க கருத்துக்கள் புரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பகவத் கீதா என்னும் அறிய கருத்தை உலக மக்களுக்கு அறிமுக படுத்துவது நம் கடமை


நிக்கோல்தாம்சன்
மே 01, 2025 07:39

கேம்பனுர் , தோண்டமுத்துர் போன்ற பகுதிகளில் 10000 க்கும் மேற்பட்ட வங்கதேசத்தின் எக்சிக்யூட்டிவ் கள் இருந்தனரே அவர்கள் மீது என்ன நடவடிக்கை யுவர் ஹானர்


புதிய வீடியோ