மேலும் செய்திகள்
பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை
12-Apr-2025
உடுமலை, ; உடுமலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.உடுமலை பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கல் மற்றும் விற்பனை குறித்து, மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய, உதவி பொறியாளர் கணேசன் மற்றும் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளை கொண்ட குழுவினர், கடைகள், பேக்கரிகள், ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தவர்களுக்கு, 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டதோடு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறியதாவது: கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில், ஒரு சிலர் மோசடியாக, மக்காச்சோளத்தில் தயாரித்தது, பிளாஸ்டிக் பயன்படுத்தாத கேரிபேக், மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்றது, என போலியாக கூறி, கடை உரிமையாளர்களை ஏமாற்றி, விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து முறையாக ஆய்வு செய்து, கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். துணி, மஞ்சள் பைகளை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் காக்க உதவ வேண்டும். போலியாக பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிக்கும் நிறுவனம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.
12-Apr-2025