பனியன் துணி திருட்டு; நான்கு பேர் கைது
திருப்பூர்; ஆறு லட்சம் மதிப்புள்ள பனியன் துணியை திருடிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், காங்கயம் ரோடு, காசிபாளையத்தை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி, 46; பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை செய்து வந்த லட்சுமண பெருமாள், 35, ரமேஷ் சுப்பு, 37, சுப்ரமணி, 36 மற்றும் ரமேஷ், 39 ஆகியோர், ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2 ஆயிரம் கிலோ பனியன் துணியை திருடியது தெரிந்தது. புகாரின் பேரில், நான்கு பேரையும் நல்லுார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.