உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கிடப்பில் பேட்டரி வாகனங்கள்: உறக்கத்தில் ஊராட்சி அதிகாரிகள்

 கிடப்பில் பேட்டரி வாகனங்கள்: உறக்கத்தில் ஊராட்சி அதிகாரிகள்

பெருமாநல்லுார்: திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம், 13 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை எடுப்பதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 15வது மத்திய நிதி குழு மானியத்தில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், 25 பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட பேட்டரி வாகனம், 13 ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்குவதற்காக தற்போது, அனைத்தும் கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக. மாதம் வழங்கப்பட்ட பேட்டரி வாகனம் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படாமல் உள்ளது. இவ்வாறு, மூன்று மாதங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், வண்டி அனைத்தும் வெயிலிலும், மழையிலும் நின்று துாசி படிந்து காணப்படுகிறது. ஊராட்சி பகுதிகளில் குப்பை எடுக்க போதிய வண்டி வசதி இல்லை. இருக்கும் பழைய வண்டியை அவ்வப்போது பழுது பார்த்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக வழங்கப்பட்ட வண்டியை முறையாக வழங்குவதில் அதிகாரிகள் மெத்தன போக்கு காட்டுவதால், வண்டிகள் பாலாகி வருகிறது. அவற்றை சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்க, துறை அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ