உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடற்கரை கையுந்து பந்து குமுதா பள்ளி அபாரம்

கடற்கரை கையுந்து பந்து குமுதா பள்ளி அபாரம்

திருப்பூர்: முதல்வர் கோப்பைக்கான மாநில, அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டி நாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் குமுதா பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும், மூன்றாமிடம் பெற்று 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையையும் பெற்றனர். இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வென்றனர். இவர்களை ஈரோடு கலெக்டர் கந்தசாமி பாராட்டி பரிசு வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் அரவிந்தன், இணைச்செயலர் மாலினி அரவிந்தன், முதல்வர் மஞ்சுளா, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ