உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பக்தி யோகம் எளிமையானது

 பக்தி யோகம் எளிமையானது

பல்லடம்: பல்லடம் அருகே, மகாலட்சுமி நகரில் உள்ள ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மையத்தில் நேற்று சத்சங்க நிகழ்ச்சி நடந்தது. ஸ்தாபக ஆச்சாரியர் பிரபு பாதர் பேசியதாவது: துாய்மையான பக்தன் என்பவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை. பகவானை திருப்தி செய்வதை தவிர வேறு ஒன்றையும் விரும்புவதில்லை. எனவேதான், தன்னலமற்ற பக்தன் தன்னை எளிதில் அடைவதாக பகவான் கூறுகிறார். கிருஷ்ணருக்கு, ராமர், நரசிம்மர், நாராயணன் பல்வேறு ரூபங்கள் இருந்தாலும், பக்தர்கள் ஏதேனும் ஒரு ரூபத்தைத் தேர்ந்தெடுத்து அதன் மீது மனதை பதிய வைக்கலாம் என்கிறார் பகவான். பக்தி யோகம் என்பது எளிமையானது. எவன் ஒருவன் கடவுளிடம் முழுமையாக சரணடைகிறானோ, அவனால் பகவானை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட பக்தர்களின் தேவைகளை பகவான் பூர்த்தி செய்து தருகிறார். இதன் மூலம், பகவானின் ஆன்மீக உலகை அவர்களால் எளிதில் அடைய முடியும். இடம், பொருள் பாராமல் எந்த நேரத்திலும் பகவானை நினைத்து இருப்பவர்களே துாய பக்தர்கள். பகவானும் துாய பக்தர்களை ஒரு போதும் விடமாட்டார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதே தொண்டு. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ஹரிநாம சங்கீர்த்தனம், பகவத் கீதை உபன்யாசம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ