உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாரதி ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

பாரதி ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் பொறுப்பேற்பு

திருப்பூர்; திருப்பூர் பாரதி ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது. விழாவில், கிருத்திகா தங்கராஜ் வரவேற்றார். செயலாளர் ராதிகா விஸ்வநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். புதிய தலைவராக தாரா ஜெய்சங்கர், செயலாளர் லதா, பொருளாளர் மதுபாரதி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது: ஊர் உலகம் சுற்றுவதும், பொருட்களை வாங்கி குவிப்பதும் மட்டும் மகிழ்வான வாழ்க்கை அல்ல. நமக்காக மட்டுமன்றி, பிறருக்காகவும் வாழ்வதுதான் வாழ்க்கைக்கான முழு அர்த்தமாகும். நமக்கு அதுபோன்ற வேலைகள் நிறைய உள்ளன. இப்பணியில் பெண்களாகிய நீங்கள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி. பாரதத்தில் பெண்கள் தற்போது எதற்கும் ஆசைப்படலாம், எந்த பொறுப்பையும் அடையலாம். எந்த நிலைக்கும் உயரலாம். எல்லாவகை வெற்றிகளையும், தனதாக்கி கொள்ளலாம். அவ்வகையில் கல்வி முதல் கொண்டு, அனைத்திலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஒரு மனிதனை, நல்ல மனிதனாக உருவாக்குவது உண்மையான கல்விதான். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை