வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Mani . V
நவ 23, 2024 06:00
ஏதே கொள்ளையடிக்க பூமி பூஜையா?
அவிநாசி : அவிநாசி அருகே சாக்கடை கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஒன்றிய பொது நிதியில், 3.98 லட்சம் ரூபாய் மற்றும் 15வது நிதிக்குழு மானியம் 4 லட்சம் ரூபாய் ஆகியவற்று டன், மெத்தக்கடை முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரை, சாக்கடை கால்வாய் வடிகால் கட்டும் பணிகளுக்காக பூமி பூஜை நடைபெற்றது.இதில், அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் (பொறுப்பு) பிரசாத்குமார், நடுவச்சேரி ஊராட்சி தலைவர் வரதராஜ், புஞ்சை தாமரைக் குளம் ஊராட்சி தலைவர் சரவணகுமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஏதே கொள்ளையடிக்க பூமி பூஜையா?