பீஹார் வாலிபர் கைது போன்கள் பறிமுதல்
திருப்பூர் : கருவம்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 40. மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த போன்கள் திருட்டு போனது தெரிந்தது. தெற்கு போலீசார் விசாரித்தனர்.நள்ளிரவில் வாலிபர் ஒருவர் ஷட்டர் பூட்டை உடைத்து மொபைல் போன்களை திருடி சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார் 'சிசிடிவி' கேமராக்களை பார்வையிட்டனர்.அதில், ஆத்துப்பாளையத்தில் தங்கியுள்ள பீஹார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் தாகூர், 39 என்பவர் போன்கள் திருடியது தெரிந்தது, அவரை கைது செய்து, 47 மொபைல் போன்களை மீட்டனர்.நான்கு மணி நேரத்தில் போலீசார், குற்றவாளியைப் பிடித்தனர். இவர் மீது, பல திருட்டு வழக்குகள் இருப்பது தெரிந்தது.