உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ. நெசவாளர் பிரிவு ஆலோசனை கூட்டம்

பா.ஜ. நெசவாளர் பிரிவு ஆலோசனை கூட்டம்

திருப்பூர்: திருப்பூரில், பா.ஜ., நெசவாளர் பிரிவு அறிமுக கூட்டம் நடந்தது. கோவை பெருங்கோட்ட அளவில், எட்டு மாவட்ட நெசவாளர் பிரிவு அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று திருப்பூரில் நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் வழிகாட்டுதல் படி நடந்தது. மாநில பொறுப்பாளர் ராகவன், கோட்ட அமைப்பு செயலாளர் பாலகுமார், நெசவாளர் பிரிவு மாநில அமைப்பாளர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. மாநில இணை அமைப்பாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் சரோஜினி, மாவட்ட தலைவர் வேலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் இடத்தில் கொண்டு சேர்ப்பது குறித்தும், வரும் தேர்தலில் களப்பணியாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை