மேலும் செய்திகள்
முகவர் பயிலரங்கம்
16-Nov-2025
பல்லடம்: பா.ஜ. சட்டசபை தொகுதிக்கான பயிலரங்கம் மற்றும் மாநாடு, பல்லடத்தில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஜோதிமணி கந்தசாமி, சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வினோத் வெங்கடேஷ், நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் முரளி பேசுகையில், ''திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., இன்று பி.எல்.ஓ.,க்கள் பின்னாலேயே சென்று வருகிறது. மாற்றம் கண்டிப்பாக வேண்டும். அது எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் நடக்கும். எந்த மதம் என்பது பா.ஜ.வுக்கு முக்கியமல்ல. தேசப்பற்று உள்ளவராக மட்டும் இருந்தால் போதும். திருவனந்தபுரம் வெற்றியே இதற்கு உதாரணம். விரைவில் தமிழகத்திலும் தாமரை மலரும்'' என்றார்.
16-Nov-2025