ரத்த தான முகாம்
திருப்பூர்,; சுதந்திர தினத்தை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், யாசின் பாபு நகர் கிளை சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் சிக்கந்தர், செயலாளர் அன்சர் முன்னிலை வகித்தனர். மொத்தம் 38 பேர் ரத்த தானம் வழங்கினர். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.