உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாகேஸ்வர சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு  பதவியேற்பு

நாகேஸ்வர சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு  பதவியேற்பு

திருப்பூர்; கொடுவாய் நாகேஸ்வர சுவாமி கோவில், அறங்காவலர் குழு நேற்று பொறுப்பேற்றது.திருப்பூர் மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வரும் கோவில்களுக்கு, அறங்காவலர் குழு நியமனம் நடந்து வருகிறது. இந்நிலையில், கொடுவாய் நாகேஸ்வர சுவாமி கோவிலில், ஐந்து பேர் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று, அறங்காவலர் குழு தலைவராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். அறங்காவலராக, ஈஸ்வரமூர்த்தி, ராமநாதன், வேணம்மாள், நடராஜ் பொறுப்பேற்றனர். ஹிந்து அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி, முத்தணம்பாளையம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மாலதி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராஜா சண்முகம், முன்னாள் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை