மேலும் செய்திகள்
முதல்வர் பார்வைக்கு -2
09-Nov-2024
உடுமலை; மருள்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகள் தரைமட்டமாகி வரும் நிலையில், அப்பகுதி புதர் மண்டி காணப்படுவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.உடுமலை அருகே மருள்பட்டியில், 1994ல், வீட்டு வசதி வாரியத்தால், சிறிய மற்றும் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ், 300 வீடுகள் கட்டப்பட்டன. பல்வேறு காரணங்களால், வீடுகள் ஏலம் போகவில்லை.யாரும் குடியேறாத நிலையில், பயன்பாடு இல்லாமல் வீடுகள் தரைமட்டமாகி வருகின்றன. அப்பகுதி முழுவதும் புதர் மண்டி சமூக விரோத செயல்களின் மையமாக மாறி விட்டது. இதனால், அருகிலுள்ள இணைப்பு ரோட்டில் செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.எனவே, வீட்டு வசதி வாரியத்தினர், அவ்விடத்தில் மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதுவரை, அங்குள்ள புதர்களை அகற்றி, அருகிலுள்ள கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
09-Nov-2024