உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமைப்பு சாரா தொழிலாளருக்கு போனஸ் வழங்க வேண்டும்

அமைப்பு சாரா தொழிலாளருக்கு போனஸ் வழங்க வேண்டும்

திருப்பூர்:தமிழ்நாடு எச்.எம்.எஸ். கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் பேரவை சார்பில் நேற்று, கலெக்டர் வாயிலாக, தமிழக அரசுக்கு, தீபாவளி போனஸ் தொடர்பான மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறியிருப்பதாவது: கட்டுமானம், அமைப்புசாரா, ஆட்டோ தொழிலாளர்களின் கடின உழைப்பால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையோடு இருக்கிறது. புதுச்சேரி மற்றும் டில்லியில், நலவாரிய உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. தமிழகத்திலும், கட்டுமான, அமைப்புசாரா, ஆட்டோ நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, 7 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸாக வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை