உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாளம் தப்பாமல் வாசிப்பு வளரும் கலைஞனால் பூரிப்பு

தாளம் தப்பாமல் வாசிப்பு வளரும் கலைஞனால் பூரிப்பு

'ஊர், உலகம் போற்றும் 'டிரம்ஸ்' இசைக்கலைஞராக வரணும். உலகளவில் புகழ் பெறணும்னு, சின்ன வயசில் இருந்தே, என் பையனுக்கு ஆசை... அது நிறைவேறிட்டே வருது...'இப்படியாக நெகிழ்ந்தனர் திருப்பூரை சேர்ந்த வினோத் - இந்திராகுமாரி தம்பதி. திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் ராகுல் தான் இந்த பெருமையை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.உலகளவில், லண்டன் டிரினிட்டி பல்கலை சார்பில், இசைக்கருவி வாசிப்பில் 'கிரேடு' வாரியாக, கலைஞர்களின் திறமை மதிப்பிடப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.இது, இசைத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு, மிகப்பெரும் அங்கீகாரமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் 'டிரம்ஸ்' இசைக்கருவி இசைப்பதில், கடைசி நிலையான, 8வது கிரேடு தேர்ச்சி பெற்று, 'மிக இளம் வயதில் தேர்ச்சி பெற்றவர்' என சாதித்துள்ளார் ராகுல், 17.இளம் வயது சாதனையாளர் என அங்கீகரித்து, கலாம் உலக சாதனை புத்தகம் இடம் பிடித்திருக்கிறார். ராகுலின் பெற்றோர் கூறுகையில், ''சிறு வயதிலேயே டிரம்ஸ் இசைக்க வேண்டும் என்பது ராகுலின் விருப்பம். பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தோம். அதன் விளைவாக தவில், தபேலா, மிருதங்கம், செண்டை, தாரை தப்பட்டை போன்ற அனைத்து தோலிசை கருவிகளையும் கற்று, வாசித்து வருகிறார்.இதில், டிரம்ஸ் வாசிப்பில், லண்டன் டிரினிட்டி பல்கலையில், டிரம்ஸ் வாசிப்பு தொடர்பான தேர்வில், ராக், பாப், ஜாஸ் உள்ளிட்ட மேற்கத்திய இசை மற்றும் கர்நாடக இசைப்பிரிவில், 8வது நிலை (கிரேடு) தேர்ச்சி பெற்று, சான்றிதழ் பெற்றுள்ளார்,'' என்றார். தன் குழந்தையின் கனவு மெய்ப்பட வேண்டும் என்பது தானே, ஒவ்வொரு பெற்றோரின் ஆசையாக இருக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ