திருப்பூர்: கார்த்திகை மாதம் நேற்று பிறந்தது; அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர்; விஷ்ணுபதி புண்ணியகாலம், சிவாலயங்களில் சங்காபிேஷகம், சோமவார பிரதோஷம் என, கோவில்களில் பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். 'கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து' என, எங்கு திரும்பினாலும், அய்யப்ப சுவாமியின் பக்தி பாடல்களுடன் சபரிமலை சீசன் துவங்கியிருக்கிறது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று, சபரிமலை அய்யப்ப சுவாமி பக்தர்கள், அதிகாலையில் மாலை அணிந்து விரதம் துவங்கினர். திருப்பூர், அவிநாசி உட்பட மாவட்டத்திலுள்ள அய் யப்பன் கோவில் உட்பட கோவில்களில், குருமார்கள் முன்னிலையில், பக்தர்கள் மாலை அணிந்தனர். சங்காபி ேஷகம் நேற்று, கார்த்திகை மாத முதல் சோமவாரம் என்பதால், சிவாலயங்களில் வலம்புரி சங்கு பூஜை மற்றும் சங்காபிேஷக பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள், சிறப்பு யாகவேள்வி நடத்தி, உலக நலன் வேண்டி சங்காபிேஷக பூஜைகளை மேற்கொண்டனர். மாலையில், திங்கட்கிழமை பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடந்தது. சோமவார பிரதோஷம் மற்றொரு விசேஷமாக பிரதோஷ வழிபாடுகளும் நடந்தன. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும், நேற்று பிரதோஷ வழிபாடும், சுவாமி புறப்பாடும் கோலாகலமாக நடந்தது. விஷ்ணுபதி புண்ணியகாலம் வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதம் 1ம் தேதி விஷ்ணுபதி புண்ணியகாலம் எனப்படுகிறது. அதன்படி, திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், கோவில்வழி பெரும்பண்ணை வரதாராஜ பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், மங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவில், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள், 27 முறை கோவில் வெளி பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டனர். கார்த்திகை மாதப்பிறப்பு, ஆன்மிக ஊற்றெடுக்கும் நாளாக அமைந்திருந்தது. ஒரே நாளில், விஷ்ணுபதி புண்ணியகாலம், பிரதோஷம், சங்காபி ேஷகம், அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கியது என, மிக விசேஷமான நாளாக அமைந்திருந்ததாக, பக்தர்கள் தெரிவித்தனர்.