குத்துச்சண்டை போட்டி; அரசுப்பள்ளி மாணவர் சபாஷ்
திருப்பூர்; திருப்பூரில் ஓபன் இன்விடேஷன் லெவல் குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில், திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவன் முகமது அர்ஷத், 32 கிலோ எடை பிரிவில், தங்கம் வென்றார். பதக்கம் வென்ற மாணவனை, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் வாழ்த்தினர்.