| ADDED : நவ 19, 2025 04:52 AM
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவில் உள்ள பிரைட் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர் ராக்கியாபாளையத்தில் நடந்த திருப்பூர் மாவட்ட அளவில் குழந்தைகளுக்கான கிட்ஸ் அத்லெடிக்ஸ் மீட் ஐவின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். இதில், எல்.கே.ஜி. மாணவன் இளமாறன் 'சாப்ட் பால் த்ரோ'வில் முதலிடம். ஹர்ஷா நின்று நீளம் தாண்டுதலில் முதலிடம். 8 வயது மாணவர் பிரிவில், குருதீப் 75மீ ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம். 13 வயது மாணவர் பிரிவில், ஹர்ஷத் 400மீ ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடம். 14 வயது மாணவர் பிரிவில் முகமது, கிட்ஸ் ஈட்டி எறிதலில் இரண்டாமிடம், 4x75 மீ ஓட்டப்பந்தயத்தில் முகமது ரயான், குரு ஈஸ்வர், மரியா ஜோஸ்வா மற்றும் யுவுனேஷ் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றனர். போட்டியில் மாணவ, மாணவியர் 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தொடர்ந்து மூன்று ஆண்டாக சிறந்த அணி வகுப்புக்கான முதலிடத்தை பெற்று அதற்கான கோப்பையையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை அன்பு அறக்கட்டளையின் தலைவர் மோகன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், பள்ளியின் முதல்வர் மகாலட்சுமி மற்றும் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.