பழுதாகி நின்ற சரக்கு லாரி
காங்கயம்; காங்கயத்தில் ரோட்டில் பழுதாகி நின்ற சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சோயா மாவு ஏற்றிக்கொண்டு காங்கயம் வழியாக பல்லடம் நோக்கி சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா சிக்னலில் நின்று, லாரி கிளம்பும் போது, பக்கவாட்டில் இருந்த மையத் தடுப்பு மீது மோதியது. அதிக லோடு காரணமாக, லாரியின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது; ஒரு பக்கமாக லாரி சாய்ந்து நின்றது. ரோட்டின் நடுவே நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.