குழாய் உடைந்து குடிநீர் வீண்
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், தாராபுரம் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் விணாகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள், சிரமப்படுகின்றனர். எனவே, குடிநீர் வீணாவதைத் தடுக்க மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.