உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட் சுவர்கள் விளம்பரத்தால் அலங்கோலம்

பஸ் ஸ்டாண்ட் சுவர்கள் விளம்பரத்தால் அலங்கோலம்

பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்டில், சுவர்களை அலங்கோலமாக்கும் விளம்பர போஸ்டர்கள், நோட்டீஸ்கள் ஓட்டுபவர்கள் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.அரசு சுவர்களில் நோட்டீஸ்கள், போஸ்டர்கள் ஒட்டக்கூடாது; விளம்பரங்கள் செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இது பெயரளவுக்கு மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது.விதிமுறை மீறி போஸ் டர்கள் ஓட்டுபவர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்பவர்கள் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிகாரிகள் இது குறித்து கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதால், இன்று, பெரும்பாலான அரசு சுவர்கள் விளம்பரமயமாகத்தான் உள்ளன. இதனால், துாய்மையை பின்பற்ற வேண்டிய அரசு சுவர்கள், கட்டடங்கள், அலங்கோலமாக காணப்படுகின்றன.ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் வந்து செல்லும் பல்லடம் பஸ் ஸ்டாண்டில் விதிமுறை மீறி விளம்பர போஸ்டர்கள், நோட்டீஸ்கள் ஒட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது.பல்லடம் நகராட்சி நிர்வாகத்தின் மூலம், பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பஸ் ஸ்டாண்டின் சுவர்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. இதனுடன், நோட்டீஸ்கள் ஒட்டவோ எழுதுவோ கூடாது என, வழக்கம்போல் வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.இது ஒருபுறம் இருக்க, சில தனியார் நிறுவனங்கள், எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், நோட்டீஸ்கள் ஒட்டி சுவர்களை அலங்கோலமாக்கி வருகின்றன. பல லட்சம் ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோல் போஸ்டர்கள், நோட்டீஸ்கள் ஒட்டி பஸ் ஸ்டாண்டை அலங்கோலமாக்குவதால், மக்களின் வரிப்பணம் தான் வீணாகும்.நகராட்சி நிர்வாகம் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பஸ் ஸ்டாண்டில், விளம்பர போஸ்டர்கள், நோட்டீஸ்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை