உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பெண்கள் பள்ளி முன் பஸ் நிறுத்தம்; பெற்றோர் வேண்டுகோள்

அரசு பெண்கள் பள்ளி முன் பஸ் நிறுத்தம்; பெற்றோர் வேண்டுகோள்

உடுமலை; உடுமலை, தளி ரோடு மேம்பாலத்தின் அருகில், காந்தி சவுக், சிங்கப்பூர் நகர், பத்ரகாளியம்மன் லே - அவுட், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மாணவியருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது. இப்பள்ளியில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு பஸ்சில் வரும் மாணவியர், ரயில்வே ஸ்டேஷன் அல்லது முதற்கிளை நுாலக பஸ் நிறுத்தத்திலிருந்து நடந்து வர வேண்டும். காலை நேரங்களில், கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வரும் குழந்தைகள், மீண்டும் நடந்து பள்ளிக்கு செல்வதில் சோர்வடைகின்றனர். மேலும், முதற்கிளை நுாலகம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப் பகுதியில், மிகுதியான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதன் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் இருப்பதால், அப்பள்ளி மாணவர்கள் அதிகமாக அந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்கள் பள்ளி மாணவியர் யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப் வரை செல்கின்றனர். அங்குள்ள பஸ் ஸ்டாப்பிலும் நிழற்கூரை வசதி இல்லாததால், மாணவியர் பலரும் மயக்கமடைகின்றனர். இதனால் மேம்பாலம் அருகே, பழைய நகராட்சி அலுவலக கட்டடம் முன்பு பஸ் நிறுத்தம் அமைக்கப்படுவதால், பள்ளி மாணவியர் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி நேரங்களில் மட்டும், மேம்பாலம் அருகே பஸ்களை நிறுத்த, போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ