உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில இளைஞர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

மாநில இளைஞர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்; சமுதாய வளர்ச்சிக்காக சேவை செய்யும் இளைஞர்களுக்கு, சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டு இவ்விருது, வரும் ஆக., 15ம் தேதி சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. 15 முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் தலா மூன்று பேருக்கு, விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, ஆண், பெண்கள், கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் அடிப்படையில், விருதுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டு தமிழகத்தில் குடியிருந்த வராக இருந்ததற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை, கல்லுாரி, பள்ளிகளில் பணிபுரிவோர் விண்ணப்பிக்க கூடாது.விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். வரும் மே 5ம் தேதி, மாலை, 4:00 மணிக்குள், www.tn.gov.inஎன்கிற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி