உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவாரப்பணிக்கு அழைப்பு

உழவாரப்பணிக்கு அழைப்பு

தேசிய ஹிந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் அறிக்கை: தேசிய ஹிந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பில், 336வது கோவில் உழவாரப் பணி வரும், 29ம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளது. கூலிபாளையம் நால் ரோடு, எஸ்.பெரிய பாளையம் பகுதியில் அமைந்துள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில், அன்று காலை 7:00 மணி முதல் உழவாரப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் பங்கேற்று ஆன்மிக சேவையில் தங்களை ஈடு படுத்திக் கொள்ள விரும்புவோர் தங்களை இதில் இணைத்துக் கொள்ளலாம். அமைப்பின் தேசிய செயலாளர் சுரேஷ், மாவட்ட அமைப்பாளர்கள் சின்னராஜ், செந்தில்குமார், தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். உழவாரப் பணியில், இணைய 86080 05555, 82706 00234 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !