மேலும் செய்திகள்
ரேஷன் கடை குறைகேட்பு மாவட்டம் முழுதும் நடக்கிறது
08-Oct-2025
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்ட கபாடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் விடுத்துள்ள அறிக்கை: தேசிய அளவிலான 35-வது சப்-ஜூனியர் சிறுவர் சிறுமியர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி, ஹரியானாவில், வரும், நவ. 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி கலந்து கொள்ளுவதற்கு, தகுதியான வீரர், வீராங்கனையரை தேர்வு செய்ய, வரும், 31ம் தேதி மற்றும் அடுத்த மாத, 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சேலத்தில் போட்டி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கான போட்டி தேர்வு வரும், 26ம் தேதி காலை, 9:00 மணி முதல், காங்கயம் ரோடு மாவட்ட கபடி கழகத்தில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க விருப்பமுள்ள சிறுவர்கள் எடை 60 கிலோ, சிறுமியர், 55 கிலோ, 16 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை மாவட்ட கபடி கழகத்தின் சார்பாக, மாநில போட்டி தேர்வுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.
08-Oct-2025