உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வணிகர்களுக்கு அழைப்பு

வணிகர்களுக்கு அழைப்பு

பல்லடம்: மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீராய்வு மற்றும் வரி குறைப்பு நடவடிக்கைக்கான பாராட்டு விழா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில், நவ., 11ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்குமாறு தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று, பல்லடம் வணிகர் சங்க பேரமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் லாலா கணேசன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைமைச் செயலாளர் ராஜ்குமார் வணிகர்களுக்கு அழைப்பிதழை வழங்கி விழாவில் பங்கேற்குமாறு வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை