உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உறைவிடப்பள்ளிகளில் கேமரா பொருத்தம்; பழங்குடியினர் நலத்துறையினர் கண்காணிப்பு

உறைவிடப்பள்ளிகளில் கேமரா பொருத்தம்; பழங்குடியினர் நலத்துறையினர் கண்காணிப்பு

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.மலைவாழ் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக, அரசும், பழங்குடியினர் நலத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், மலைவாழ் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில், ஐந்து பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிடப்பள்ளிகள் உள்ளன. ஐந்தும் உடுமலை சுற்றுப்பகுதியில் கரட்டூர், அமராவதிநகர், லிங்கமாவூர், திருமூர்த்திநகர், பெருமாள்புதுாரில் உள்ளன.இப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மலைவாழ் பகுதி குழந்தைகள் தங்கி படிக்கின்றனர். தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் சமையலர் இப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.மாணவர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள், காலை உணவு மற்றும் சத்துணவு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இப்பள்ளியில், மாணவர்களுக்கான வகுப்புகளுடன் அவர்கள் தங்கவைத்து பராமரிக்கப்படுவதால் பாதுகாப்பும் அவசியமாகிறது.குறிப்பாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் குழந்தைகளாக இருப்பதால், கூடுதல் கண்காணிப்பு தேவையென எதிர்பார்க்கப்பட்டது.மாணவர்களின் பாதுகாப்பிற்கு, நீண்ட நாட்களாக பள்ளியில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், தற்போது பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள், பள்ளிகளை நேரடியாக கண்காணிப்பதற்கு இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, பழங்குடியின மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி