உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையோர ஆசாமிக்கு புகலிடம் கிடைக்குமா?

சாலையோர ஆசாமிக்கு புகலிடம் கிடைக்குமா?

திருப்பூர்; திருப்பூர் டவுன் ஹால் அருகே உள்ள நபரை, பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் டவுன்ஹால், நடைமேம்பாலத்தின் கீழே, கடந்த பல நாட்டகளாக, தனிநபர் ஒருவர் துணி பைகளுடன் வந்து தங்கியிருக்கிறார். கோவில் பகுதிகளில், மர்ம நபர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதால், சுகாதாரம் பாதிக்கப்படுவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.எனவே, மாநகராட்சி நிர்வாகம், கோவில் அருகே உள்ள நடைபாதை பாலத்தின் கீழ் தங்கியுள்ள நபரை அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை