உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண் போன போக்கிலே கால் போகலாமா! தொங்கல் பயணத்துக்கு எப்போது முற்றுப்புள்ளி?

கண் போன போக்கிலே கால் போகலாமா! தொங்கல் பயணத்துக்கு எப்போது முற்றுப்புள்ளி?

பல்லடம்; பல்லடம் வழியாக கோவை செல்லும் பஸ்களில், தினமும் தொங்கல் பயணம் நடந்து வரும் நிலையில், கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருப்பூர், கோவை இரண்டும் தொழில் நகரங்களாக உள்ளன. கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கும் கோவை பெயர் பெற்றதாக உள்ளது. இதனால், தொழில், வியாபாரம், வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும், பொதுமக்கள், தினசரி கோவை, திருப்பூர் செல்கின்றனர். குறிப்பாக, திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை செல்லும் பெரும்பாலான அரசு தனியார் பஸ்கள், நிரம்பி வழிந்தபடியே செல்கின்றன. கல்லுாரி செல்லும் மாணவர்கள் உட்பட, வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பலரும் குறிப்பிட்ட நேரத்திலேயே பஸ்களில் பயணிப்பதால், காலை நேரங்களில், பெரும்பாலான பஸ்கள் கூட்ட நெரிசலால் திணறுகின்றன. பஸ்களில், படிக்கட்டு பயணம் மேற்கொள்வதால், எண்ணற்ற விபத்துக்கள், உயிரிழப்புகள் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டே, பஸ்களில், தானியங்கி கதவுகளும் பொருத்தப்பட்டன.ஆனால், கோவை செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசல் காரணமாக, தானியங்கி கதவுகளையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக, பெண்கள், தாய்மார்கள் மற்றும் வயதானவர்கள் பஸ் ஏற முடியாத நிலையும் உள்ளது.எனவே, திருப்பூரில் இருந்து பல்லடம் வழியே கோவைக்கு, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது, பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை