உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்

கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்

திருப்பூர்; திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆண்டிபாளையத்தில், போலீசார் சோதனை செய்தனர். சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பச்சா பதக், என்பவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 450 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் அதைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.  திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே வடக்கு போலீசார் சோதனையின் போது, ராஜேஷ்குமார், 30, என்பவர் பிடிபட்டார். அவரிடம் சோதனையிட்டபோது, ஒரு கிலோ குட்கா மற்றும் 800 கிராம் கஞ்சா சாக்லேட்கள் கிடைத்தது.  அதேபோல், இந்திரஜித், 25, என்பவரும் ஒருகிலோ கஞ்சா மற்றும் 800 கிராம் கஞ்சா சாக்லேட்டுடன் போலீசில் சிக்கினார்.அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.  நல்லுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட புதுார் பிரிவு அருகே போலீசார் சோதனை செய்த போது,ரமேஷ், 55, என்பவர் 400 கிராம் குட்கா பாக்கெட்டுகளுடன் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்தனர். மது விற்றவர்கள் கைது நல்லுார் போலீஸ் எல்லையில் முத்தணம்பாளையம் பகுதி டாஸ்மாக் பார் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது போலீஸ் சோதனையில் தெரிந்தது.ராஜன், 47 என்பவரை 27 மது பாட்டில்களுடன் போலீசார் கைது செய்தனர்.  15- வேலம்பாளையம், செட்டிபாளையம் - பூண்டி ரிங் ரோடு டாஸ்மாக் பார் அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை செய்த, முத்துச்செல்வம், 39 பிடிபட்டார். அவரிடம் 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை