உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சரக்கு ஆட்டோவா... பயணியர் ஆட்டோவா? அதிகாரிகள் கண்ணில் தப்பும் முறைகேடு

 சரக்கு ஆட்டோவா... பயணியர் ஆட்டோவா? அதிகாரிகள் கண்ணில் தப்பும் முறைகேடு

அவிநாசி: அவிநாசி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட்களில் இயங்கும் பயணியர் ஆட்டோவை சரக்குகள் ஏற்றிச்செல்லும் ஆட்டோவாக பயன்படுத்தி வருவதை தடுக்க சரக்கு வாகன டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி நகராட்சி பகுதியில் சூளை, சிந்தாமணி பஸ் ஸ்டாப், தாலுகா அலுவலகம், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், சந்தை மேடு உள்ளிட்ட பகுதிகளிலும் அவிநாசிலிங்கம் பாளையம் பஸ் ஸ்டாப், ஆட்டையாம் பாளையம், வேலாயுதம்பாளையத்தில் மங்கலம் ரோடு பிரிவு ஆகிய பகுதிகளிலும் ஆட்டோ ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. சமீபகாலமாக ஆட்டோக்களில் கட்டட கட்டு மான பொருட்கள், பெயின்ட், பனியன் நிறுவனங்களுக்கு துணி பண்டல்கள் என பயணியர் ஆட்டோவை சரக்குகள் ஏற்றிச்செல்லும் ஆட்டோவாக பயன்படுத்துதல் அதிகரித்து வருகிறது. இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'ஒரு சிலர் ஆட்டோவை வேகமாக இயக்குவதும், அதிகம் சத்தம் எழுப்பும் வகையில் ஹாரன்கள் அடித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோக்களை இயக்குகின்றனர். ஒரு சிலர், பொருட்களை ஏற்றி செல்கின்றனர். ஒரே ஸ்டாண்டில் இயங்கும் ஆட்டோக்கள் ஒரு பகுதிக்கு செல்ல வெவ்வேறு கட்டணங்களை வாங்குகின்றனர். இந்த புகார் குறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்ய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ