உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மும்மூர்த்திகளை வழிபட வண்டி பயணம்; உடுமலையில் தொடரும் பாரம்பரியம்

மும்மூர்த்திகளை வழிபட வண்டி பயணம்; உடுமலையில் தொடரும் பாரம்பரியம்

உடுமலை: ஆடி அமாவாசைக்காக, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் திரண்ட பக்தர்கள், ஆடிப்பட்டம் செழிக்க வழிபாடு செய்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே மும்மூர்த்திகளாக எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் நடக் கும் ஆடி அமாவாசை வழிபாடுகள் பிரசித்தி பெற்றதாகும். பருவமழைக்குப் பிறகு, விளைநிலங்களில் ஆடிப்பட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாகுபடி செழிக்க, உடுமலை சுற்றுப்பகுதிகளில் இருந்தும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய் கிறார்கள். இந்தாண்டு, நேற்று முன்தினம் இரவில் இருந்தே, மாட்டு வண்டிகள், திருமூர்த்திமலைக்கு சென்றன. அதிகாலை முதல் கோவிலில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மும்மூர்த்திகளை நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஹிந்து அறநிலையத்துறை சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தது. பக்தர்கள் கூறுகையில், 'விளைநிலங்களில், ஆடிப்பட்டம் செழிக்க, ஆடி அமாவாசை யன்று திருமூர்த்திமலையில் வழிபாடு செய்கிறோம். ரேக்ளா வண்டிகளில் பூட்டி ஓட்டுவதற்கு பழக்கப்படும் காளைகளை, திருமூர்த்திமலை மண்ணுக்கு அழைத்து வருவது பாரம்பரியமாக தொடர்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை