விவசாயிகள் மீது வழக்கு; போராட்டம் நடத்த முடிவு
திருப்பூர்; ஊதியூர், காங்கயம் பகுதியில் கள் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது.இதன் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிக்கை:உலகளாவிய நடைமுறை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக கள்ளுக்கு தமிழகத்தில் மற்றும் தடை உள்ளது. கள்ளுக்கான தடையை நீக்க கோரி கள் இயக்கம் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது.கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இதைதடுப்பது சட்டத்துக்கு புறம்பானது.கள் இறக்கும் விவசாயிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். காங்கயம், ஊதியூர் பகுதியில் போலீசார் இதனை தொடர்ந்து செய்து வருகின்றனர். இது தொடரும் பட்சத்தில், கள் இயக்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் காங்கயத்தில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.