உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் படம் ஒட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு

முதல்வர் படம் ஒட்டிய பா.ஜ.,வினர் மீது வழக்கு

காங்கயம் : மதுக்கடையில் தமிழக முதல்வர் படத்தை ஒட்டிய பா.ஜ.,வினர் மீது காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தமிழகத்தில் டாஸ்மாக் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, 'டாஸ்மாக்' நிர்வாகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.,வினர் பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றனர். அவ்வகையில், நேற்று முன்தினம் பா.ஜ., மகளிர் அணியினர், 'டாஸ்மாக்' மதுக்கடைகளின் முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்டோவை ஒட்டி போராட்டம் நடத்தினர்.காங்கயம் பரஞ்சேர்வழி நால் ரோட்டில் உள்ள மதுக்கடையில், பா.ஜ., மகளிர் அணியைச் சேர்ந்த கார்த்திகா, கலா உள்ளிட்டோர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர்.இது குறித்து காங்கயம் போலீசார், பா.ஜ.,வினர், 10 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
மார் 22, 2025 15:52

என்ன இது தமிழக காவல்தொறை செய்வது மிக மிக அநியாயமாக இருக்கிறது . மத்தியரசின் ரேசன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைத்தாலும் வழக்கு . தமிழக திராவிட மாடல் அரசின் சாராய கடைகளில் முதல்வர் திராவிட மாடல் கட்சியின் தலைவரு படத்தை வைத்தாலும் வழக்கு எங்கே செல்கிறது தமிழகம்