உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிணற்றில் தவித்த பூனை மீட்பு

கிணற்றில் தவித்த பூனை மீட்பு

- நமது நிருபர்- திருப்பூர் கொடுவாய், பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 45; ஓட்டல் தொழிலாளி. இவரது வீட்டில் கடந்த, நான்கு ஆண்டுகளாக 'மீனு குட்டி' என்ற பெயரில் பூனை ஒன்றை செல்லமாக குடும்பத்தினர் வளர்த்து வந்தனர்.கடந்த, பத்து நாட்களுக்குமுன், நான்கு குட்டிகளை மீனு குட்டி ஈன்றது. தாயின் மடியில் விளையாடிய படி குட்டிகள் இருந்தன. திடீரென, ஐந்து நாட்களாக மீனு குட்டியை காணவில்லை.வீட்டுக்கு அருகே இருந்த, நுாறு அடி ஆழ கிணற்றுக்குள் பூனை விழுந்தது தெரிய வந்தது. திருப்பூர் தெற்கு தீயணைப்பு அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர்.பின்னர் கயிறை கட்டி உள்ளே இறங்கிய வீரர், ஐந்து நாட்களாக கிணற்றுக்குள் தவித்த மீனு குட்டியை பத்திரமாக மீட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை