உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கம்பத்தில் சிசிடிவி; விபத்து ஏற்படும் அபாயம்

மின் கம்பத்தில் சிசிடிவி; விபத்து ஏற்படும் அபாயம்

பல்லடம்; குற்ற சம்பவங்களை தடுக்கவும், சமூக விரோதி களை எளிதில் கண்டறியவும், வாகன விபத்துகள் உள்ளிட்ட சம்பவங்களின் போதும், போலீசாரின் விசாரணைக்கு 'சிசிடிவி' கேமராக்கள் மிகவும் உதவு கின்றன.இவ்வாறு, போலீசார், நகரப் பகுதிகள் மட்டுமன்றி, புறநகர் பகுதிகளிலும் 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், பல்லடம் அருகே பருவாய்- - காரணம்பேட்டை செல்லும் ரோட்டில், காமநாயக்கன்பாளையம் போலீசார் 'சிசிடிவி' கேமரா அமைத்துள்ளனர். பிரத்யேக இரும்பு பில்லர் அமைத்து கேமராக்கள் பொருத்தப்படுவது வழக்கம்.ஆனால், பருவாயில், 'சிசிடிவி'க்காக பொருத்தப்பட்ட இரும்பு பில்லர், பயன்பாடு இன்றி இருக்க, விதிமுறை மீறி அருகிலுள்ள மின் கம்பத்தில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இது, மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், 'சிசிடிவி' கேமரா பராமரிப்பு பணிகளின் போது விபத்து அபாயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கேமராக்களை மாற்றி அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி