உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழா

சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழா

பல்லடம்; பேரூர் ஆதீனம், 24ம் பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நுாற்றாண்டு விழா, செஞ்சேரிமலை நந்தவன திருமடத்தில் நடந்தது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், வரன்பாளையம் திருநாவுக்கரசர் திருமடம் மவுன சிவாச்சல அடிகளார், முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார் வரவேற்றார்.முன்னதாக, சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் உருவப்படத்துக்கு மலர் துாவி வழிபாடு நடந்தது. ஆன்மீகப் பேச்சாளர் அனந்த கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். ஆதீனங்கள் ஆசியுரை வழங்கினர். பேரூர் அடிகளார் மருத்துவமனைக்கு, திருமடத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கினார். பள்ளி குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை முக்கிய பிரமுகர்கள் செந்தில் நாதன், மந்தராச்சலம், ஈஸ் வரமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தண்டபாணி சுவாமிகள், ராமானந்த குமரகுருபர அடிகளார், செஞ்சேரிமலை திருமடத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை