விதி மீறல் அபராதம் செலுத்த மையம்
திருப்பூர்; போக்குவரத்து விதிமீறலில் அபராதத் தொகை செலுத்துவதற்கு போலீஸ் அழைப்பு மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அபராதம் விதித்து வசூலித்து வருகின்றனர். விதிமீறலில் சிறு வழக்குகளுக்கான அபராத தொகை விதிக்கப்பட்ட நபர்களுக்கு, அபராத தொகையை செலுத்தும் வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் தளத்தில் போலீஸ் அழைப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது.அம்மையத்தில் இருந்து தொடர்பு கொண்டு அபராத தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. மாநகரில் அபராத தொகை விதிக்கப்பட்டு, இதுவரை செலுத்தாத வாகன ஓட்டிகள் இம்மையத்திலிருந்து அழைப்பு வந்த உடன், மூன்று நாட்களுக்குள் நிலுவை தொகையினை செலுத்தி கோர்ட் நடவடிக்கையினை தவிர்க்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், விபரங்களுக்கு, போலீஸ் அழைப்பு மையம், 94981-81175, 94981-81078 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.