குறுமைய ஹாக்கி போட்டி; சென்சுரி பள்ளி சாம்பியன்
திருப்பூர்; பள்ளிக்கல்வித்துறை வாயிலாக, திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான ஹாக்கிப் போட்டி, சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ெஹப்சிபா பால், போட்டிகளை துவக்கி வைத்தார். பல்வேறு பள்ளிகளில் இருந்து, மாணவர்கள் பங்கேற்றனர். இறுதிச்சுற்றில், 14 வயது பெண்கள் பிரிவில், சென்சுரி பள்ளி அணி, பிரன்ட்லைன் பள்ளி அணிகள் மோதின. பரபரப்பான போட்டியில் இரு அணிகளும் சமநிலை பெற்றன. பெனால்டி முறையில், 1 - 3 கோல் கணக்கில், சென்சுரி பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. மேலும், 17 வயது பிரிவில் சென்சுரி பள்ளி அணியும், பிரன்ட்லைன் பள்ளி அணியும் மோதின. 1-0 கோல் கணக்கில் சென்சுரி பள்ளி அணி முதலிடம் பெற்றது. 19 வயது பிரிவில் சென்சுரி பள்ளி அணியும், பிரன்ட்லைன் பள்ளி அணியும் மோதின. இதில், 3-1 கோல் கணக்கில் சென்சுரி பள்ளி அணி முதலிடம் பெற்றது. ஆண்கள், 14 வயது பிரிவில், சென்சுரி பள்ளி அணி 2-0 கோல் கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி அணியை வென்று, முதலிடம் பெற்றது. 17 வயது பிரிவில், சென்சுரி பள்ளி அணி, 5-0 என்ற கோல் கணக்கில், கிட்ஸ் கிளப் பள்ளி அணியையும்; 19 வயது பிரிவில், 4-0 என்ற கோல் கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி அணியையும் வென்றது. குறுமைய அளவில் ஹாக்கிப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்ற சென்சுரி பள்ளி அணியின் மாணவர்கள், பயிற்சியாளர் பாலசுப்ரமணியன் ஆகியோரை, பள்ளி தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் ெஹப்சிபா பால் ஆகியோர் பாராட்டினர்.