பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சியில் சதம் அடித்த சென்சுரி பள்ளி
திருப்பூர், ; முதன் முறையாக, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வெழுதிய சென்சுரி பவுண்டேஷன் பப்ளிக் பள்ளி மாணவர்கள், தேர்ச்சியில், 'சென்சுரி' அடித்துள்ளனர்.மாணவி ஸூக்ஸ்மா, 500க்கு 489 மதிப்பெண் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தார். பொது தேர்வெழுதிய 18 மாணவர்களில், 12 பேர், 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றனர். 6 மாணவர்கள், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்றுள்ளது.மாணவி பிரகர்ஷா, பள்ளி அளவில் முதலிடம்; மாணவி ஹரிணி, இரண்டாமிடம்; மாணவர் சிவகுமார், மூன்றாமிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், ஊக்குவித்த பெற்றோர் ஆகியோருக்கு, பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் மாயா வினோத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.'மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுதல் என்ற நிலைப்பாட்டை தவிர்த்து, மாணவர்களின் தனித்திறன் கண்டறியப்பட்டு, கல்வி போதிக்கப்படுகிறது; மாறாக, பாடங்கள் அவர்களது மனதில் திணிக்கப்படுவதில்லை. 9ம் வகுப்பு மாணவர்கள், தாங்களாகவே படித்து உணர்ந்து விடையளிக்கும் வகையிலான திறமையில் ஊக்குவிக்கப்படுகின்றன,' என நிர்வாகிகள்பாாட்டினர்.