குத்து சண்டை போட்டி; வீரர்களுக்கு சான்றிதழ்
திருப்பூர்; குத்துச் சண்டை போட்டிகளில் தேசிய மற்றும் மாநில அளவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட குத்து சண்டை கழகத்தில், 'டி.ஜே., பாக்ஸிங் கிளப்' பதிவு செய்யப்பட்டதற்கான விழா மற்றும் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பை வழங்கும் விழா ரங்கநாதபுரத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட பாக்சிங் அசோசியேஷன் தலைவர் கார்த்திகேயன், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், ஹேவன் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கார்த்திக், மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சியாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் குத்துச் சண்டை வீரர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு நிலைகளில் தேசிய மற்றும் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்ற திருப்பூரை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. விழா நினைவாக அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை 'டி.ஜே., பாக்ஸிங் கிளப்' தலைவர் ஆதிலட்சுமி, துணை தலைவர்சவுமியா, செயலாளர் தரணி, பொருளாளர் சரண்யா செய்திருந்தனர்.