உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனவளக்கலை பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்  

மனவளக்கலை பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்  

திருப்பூர்; உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் சாமுண்டிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை யோகா பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நடந்தது.நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக மெஜஸ்டிக் கந்தசாமி பங்கேற்று பேசுகையில்,' மனநலத்தை ஊக்குவிக்க, உயிர்வளத்தை மேம்படுத்தவும் மனவளக்கலை பயிற்சி உதவுகிறது. நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வுக்கு யோகப்பயிற்சி பெரிதும் பங்காற்றுகிறது,' என்றார்.வனம்இந்தியா பவுண்டேஷன் நிறுவனரும், உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவருமான சுந்தர்ராஜன் பேசினார். நிகழ்வில் சாமுண்டிபுரம் மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் பாரதி, உமாமகேஷ்வரி, சாந்தி, பாண்டிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். வரலாற்று துறைத்தலைவர் சங்கமேஷ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி