தாண்டுவதற்காக சவால்கள்; தாங்குவதற்காக சங்கடங்கள்
திருப்பூர்: திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி மற்றும் என்.எஸ்.எஸ்., அமைப்பு இணைந்து, போலீசாரின் 'குற்றம் இல்லா நிலை' திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கல்லுாரி அரங்கில் நடத்தின. கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கே.வி.ஆர்., நகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் பேசியதாவது:கல்லுாரி வயது என்பது, சமூகத்துடன் இணைந்து பழகும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். பிரச்னைகள், சவால்கள், சங்கடங்கள் நிறைய வரும்; அதை தாங்க வேண்டும்; தாண்ட வேண்டும்; சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்; அப்போது வாழ்க்கை இனிக்கும்.சமூக ஊடகங்களில் தனிப்பட்ட புகைப்படம், குடும்ப புகைப்படங்கள் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். புகைப்படங்களை 'மார்பிங்' செய்து, தவறான செயலுக்கு பயன்படுத்தும் 'சைபர்' குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. நமது தனிப்பட்ட புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் செயல்பாடுகள் நமக்கானவை; அதை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற உணர்வு வர வேண்டும்.பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவிகளை கண்டிக்கின்றனர் என்றால், அது உங்களின் எதிர்கால நன்மைக்கானது என்பதை உணர வேண்டும். சமூக ஊடகங்களுக்கு வந்த பின், சிறுமிகள் பலர் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர்; அந்த சிறுமியும், அவரது குடும்பத்தினரும் படும் மன உளைச்சல் சொல்லி மாளாது. சிறுமிகள், மாணவியர் பாதுகாப்பு கருதி, 'டெடிகேட்டிவ் பீட்' எனப்படும் ரோந்து துவக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகள் துவங்கி, கல்லுாரி வரை இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தி, 'டெடிகேட்டிவ் பீட்' அமைத்து, சரக வாரியாக அழைப்பு எண்கள் வழங்கப்பட இருக்கின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.---2 படங்கள் பேசுபவர் படத்தை கட் செய்து வைக்கவும். மாணவியர் படங்கள் முழுமையாக இடம்பெறச்செய்யவும்---------திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்த போலீசாரின் 'குற்றம் இல்லா நிலை' திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், உதவி போலீஸ் கமிஷனர் நாகராஜன் பேசினார்.இதில் பங்கேற்ற மாணவியர்.
டூவீலருக்காக உயிரை மாய்க்கலாமா?
பெண் குழந்தைகள் பாதுகாப்பில், மாநகர போலீஸ் கமிஷனர் அதிக ஆர்வம் காட்டுகிறார். 'குற்றம் இல்லா நிலை' என்பதை உருவாக்க, பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்கொலை என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தன் தாயிடம் டூவீலர் வாங்கித்தரும் படி கேட்கிறார் கல்லுாரி செல்லும் ஒரு மாணவர். அடுத்த மாதம் வாங்கித் தருவதாக சொல்கிறார் தாய்; ஏற்க மனமில்லாத அந்த வாலிபர், தற்கொலை செய்து கொள்கிறார். குடும்பத்தின் ஒரே வாரிசான அவரது மரணம், அந்த குடும்பத்தின் எதிர்காலத்தை எவ்வளவு பெரும் சிரமங்களுக்குள் தள்ளிவிடும் என்பதை உணர வேண்டும். இதுபோன்ற தற்கொலை சம்பவங்களை வெறும் செய்தியாக மட்டும் படித்து கடந்து போக கூடாது; அந்த குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்களை சிந்தித்து பார்க்க வேண்டும்.- நாகராஜன், உதவி போலீஸ் கமிஷனர், கே.வி.ஆர்., நகர்
கசந்து போகும் கல்லுாரி காதல்
கல்லுாரி மாணவிகள் காதல் வலையில் விழக்கூடாது; 18 வயது நிரம்பி, இரு நாட்கள் தான் ஆகியிருக்கும். 'தான் ஒரு மேஜர் பெண்' எனக்கூறி, காதல் வலையில் விழுந்து, திருமணம் செய்து கொள்கின்றனர். பெற்றோர் மறுத்தும், தன் பிள்ளையின் காலில் விழுந்து கதறினால் கூட மனம் மாறாத, பெண் பிள்ளைகள் இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, யாரோ ஒரு இளைஞரை திருமணம் செய்து கொள்கின்றனர்.வெறும் 3 முதல், 5 மாதங்களில் அந்த காதல் கல்யாணம் கசந்து விடுகிறது. அதன் பிறகு, 'தெரியாமல் தப்பு செஞ்சுட்டேன்' எனக் கூறி, கண்களை கசக்கிக் கொண்டு, காவல் நிலையம் வருகின்றனர். அந்த பிள்ளைகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே, சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடுடன் பெற்றோருக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும். இத்தகைய ஒழுக்கம் நிறைந்த பண்பு தான், நாம் கல்வி பயின்றதற்கு ஒரு உண்மையான அர்த்தத்தை கொடுக்கும்.- ராஜேஸ்வரி, இன்ஸ்பெக்டர், சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன்.
கே.வி.ஆர்., சரகத்துக்கு அழைப்பு எண்
கே.வி.ஆர்., நகர் சரகத்துக்கு உட்பட்ட பெண்கள், தங்களுக்கு ஏதேனும் இன்னல் நேரிட்டாலே, இளைஞர்களால் பாதிப்பு ஏற்படுவதாக உணர்ந்தால், 24 மணி நேரமும் செயல்படும் மொபைல்போன் எண்ணில் அழைக்கலாம்.கே.வி.ஆர்., நகர், செல்லம் நகர், கருவம்பாளையம், ஆலாங்காடு, கரைதோட்டம், தெற்கு தோட்டம், பாரப்பாளையம், கே.ஆர்.ஆர்., நகர் பகுதி சார்ந்தோர், 89259 61505 என்ற எண்ணிலும், ஆண்டிப்பாளையம், எஸ்.ஆர்., நகர், குளத்துப்புதுார், சின்னாண்டிபாளையம், தனலட்சுமி நகர், கோழிப்பண்ணை, சின்னகவுண்டன் புதுார், குறிஞ்சி நகர் பகுதி சார்ந்த பெண்கள், '89259 61506' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்--