உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளநீர் விலையில் மாற்றம்; பிற மாநிலங்களில் தேவை குறைவு

இளநீர் விலையில் மாற்றம்; பிற மாநிலங்களில் தேவை குறைவு

உடுமலை; பிற மாநிலங்களில் தேவை குறைந்துள்ளதால், இளநீர் விலை இவ்வாரத்தில் குறைந்துள்ளது. உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இதில் இளநீர் உற்பத்திக்காக பிரத்யேக வீரிய ஒட்டு ரக தென்னை மரங்களை பராமரிக்கின்றனர். உள்ளூர் தேவை மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து இளநீர் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால் இளநீர் தேவை குறைந்து விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இளநீர் ஒன்று 24 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த வாரம் வரை இளநீர் ஒன்று 30 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகள் கூறுகையில், 'இளநீர் உற்பத்திக்காக பராமரிக்கப்படும் தென்னை மரங்களில் பல்வேறு நோய்த் தாக்குதல் அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்தி தரமான இளநீர் உற்பத்தி செய்ய அதிக செலவாகிறது. எனவே விலை குறையும் போது நஷ்டம் ஏற்படுகிறது. மழையின் தாக்கம் குறையும் போது இளநீருக்கு நல்ல விலை கிடைக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை