உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து மாறுதே... யூனியல் மில் ரோடு சந்திப்பில்!

போக்குவரத்து மாறுதே... யூனியல் மில் ரோடு சந்திப்பில்!

திருப்பூர் : நொய்யல் பாலம் அருகே, மந்திரிவாய்க்கால் ஓடைக்கு சிறுபாலம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக, அந்த ரோட்டில் போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு நடந்தது.திருப்பூர், ஈஸ்வரன் கோவில் அருகே, நொய்யல் ஆற்றின் குறுக்கில் புதிய உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இந்நிலையில், நொய்யல் ஆற்றில் இணையும், மந்திரி வாய்க்கால் ஓடை தற்போது பிரதான ரோட்டில், சிறிய குழாய் அமைப்பு மூலம் ரோட்டைக் கடந்து செல்கிறது.இந்த ஓடைக்கு ரோட்டின் குறுக்கில் சிறுபாலம் கட்டதிட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி தற்போது ஒரு புறத்தில் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சிறுபாலம் கட்டும் பணி மேற்கொள்ளும் போது, நொய்யல் ஆற்றை ஒட்டிய ரோட்டில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டும்.இந்த இடத்தில் கட்டுமானப் பணி முடியும் வரை, போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து நேற்று ஆய்வு நடந்தது. மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கட்டுமானப் பணி நடைபெறும் இடம், பணிக்காலம் ஆகியன குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.சிறுபாலம் கட்டுமானப் பணியை இரு பிரிவாக மேற்கொள்ளவும், ஒரு பகுதி வழியாக வாகனங்கள் அனுமதிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. விரிவான அறிக்கை சமர்ப்பித்து போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை